பயிற்சியின் போது வயல்வெளியில் தவறி விழுந்த ஏவுகணை.! இந்திய ராணுவம் தீவிர விசாரணை.!

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் ஏவுகணை பயிற்சியின் போது ஏவுகணை விண்ணில் வெடித்து விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் ஏவுகணை பயிற்சியின் போது ஏவுகணை விண்ணில் வெடித்து விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் எல்லையில் இந்திய ராணுவப் ஏவுகணை பிரிவினர் வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சியினை மேற்கொண்டனர்.

வானில் வெடித்தது :

அப்போது, தவறுதலாக சோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணையானது வானில் பறக்கும் போதே வெடித்தாக கூறப்படுகிறது. இதில் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் அருகில் உள்ள வயல் வெளிகளில் விழுந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உயர் அதிகாரிகள் சோதனை :

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எந்த சொத்துக்களும் சேதமடையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.