ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள ஜர்பாடா வனப்பகுதியில் வாராந்திர சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் மீது, யானை மோதி பரிதாமாக உயிரிழந்தது.
அந்த யானை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பொது, போயிண்டா மற்றும் ஜரபதா நிலையங்களுக்கு இடையே வாராந்திர ரயிலில் மோதியதில் உயிழந்ததாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது.
பின்னர், வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு சில ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக சென்றன.