ஜே.சி.பியில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்... பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.! பதிலடி கொடுத்த சமூக ஆர்வலர்.!

பெங்களூருவில் ஜி.சி.பி எந்திரத்தில் வேலைக்கு சென்ற ஐடி ஊழியர்களை டிவிட்டரில் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா. அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர்.

பெங்களூருவில் ஜி.சி.பி எந்திரத்தில் வேலைக்கு சென்ற ஐடி ஊழியர்களை டிவிட்டரில் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா. அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், இதுவரை வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில், நேற்று மட்டுமே 130 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாய் இருக்கிறது.

நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் டிராக்டர், ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கின்றனர்.

இதில், பெங்களூரு ஐடி ஊழியர்கள் சிலர், ஜே.சி.பி எந்திரத்தில் தங்கள் அலுவலகத்திற்கு செல்கின்றனர். இதனை ஒருவர் டிவிட்டரில் வீடியோ எடுத்து  பதிவிட, இதனை பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த விடியோவை குறிப்பிட்டு, ‘ எப்போதும் மாற்று வழி இருக்கும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.’ என பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த அகன்சா எனும் பெண் சமூக ஆர்வலர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘ என்னை மன்னித்து விடுங்கள், ஆனால் இது நகரத்தின் உள்கட்டமைப்பு, காலநிலை மாற்றத்தை குறிக்கிறது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கின் உண்மை நிலை இதுதான். இந்த விஷயத்தில் கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node