டெல்லி பாண்டவ் நகரில் கணவரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய தாய்-மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு போலிசார், கணவரைக் கொன்று, அவரது உடலை 10 துண்டுகளாக வெட்டியதாகக் கூறி ஒரு பெண் மற்றும் அவரது மகனைக் கைது செய்துள்ளனர். டெல்லியில் கடந்த வாரத்திற்கு முன்பு நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவம், நடந்த பாணியிலேயே இந்த கொலை சம்பவமும் நடந்திருக்கிறது.
தாய்-மகன் இருவரும் அவரது உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் பாண்டவ் நகர் மற்றும் திரிலோக்புரியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. போலிசார், பாண்டவ் நகரில் உள்ள ஒரு மைதானத்தின் அருகே துண்டிக்கப்பட்ட தலை மற்றும் சில உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்,
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிசிபி(DCP) அமித் கோயல், “ஜூன் 5 அன்று, டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. அடுத்த மூன்று நாட்களில், இரண்டு கால்கள், இரண்டு தொடைகள், ஒரு மண்டை ஓடு மற்றும் ஒரு முன்கை மீட்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சடலம், அஞ்சன் தாஸ் என போலிசார் அடையாளம் கண்டதாக அவர் மேலும் கூறினார். விசாரணையில் தாஸ், கடந்த ஐந்து-ஆறு மாதங்களாக காணவில்லை என்பதும், குடும்ப உறுப்பினர்களால் காணாமல் போன புகார் எதுவும் தரப்படவில்லை என்பதும், குடும்ப உறுப்பினர்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த அவரது மனைவி மற்றும் மகனை போலிசார் விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் உடல் உறுப்புகள் அடங்கிய பையுடன் காலி மைதானத்தை நோக்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளையும் நாங்கள் கண்டுபிடித்தோம், ”என்று கோயல் கூறினார்.
காவல்துறையின் சிறப்பு ஆணையர் ரவீந்திர யாதவ் கூறுகையில் பூனம், தாஸின் இரண்டாவது கணவர், பூனம் 2017 இல் தாஸை திருமணம் செய்து கொண்டார். தாஸ் வேலைக்கு எதுவும் செல்லமாட்டார் இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என்றும் விசாரணையில் பூனம் கூறினார்.
மேலும் தாஸ், பூனத்தின் சகோதரிக்கு தொல்லை தந்து வந்ததாகவும் பூனம் கூறினார். மே 30 அன்று, தாய்-மகன் இருவரும் தாஸின் மதுபானத்தில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து அவரைக் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் ரத்தம் வெளியேற ஒருநாள் முழுதும் வீட்டில் வைத்துவிட்டு, உடலை 10 துண்டுகளாக வெட்டி அடுத்த சில நாட்களில் உடல்பாகங்களை சில பகுதிகளில் வீசியுள்ளனர். இதுவரை 6 பாகங்கள் கிடைத்துள்ளதாக டிசிபி கோயல் கூறினார்.
unknown node/p>