நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்வாசிகளுக்கு மிகவும் பிடித்த நிறுவனம், பலரும் தாங்கள் இந்த நிறுவன போனை வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்கும் பிரபல நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனம் புதிய மாடல் போனை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
எதிர்பார்த்து காத்திருந்தது போலவே, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய மாடல் நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதியதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் வெளியாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு கூடுதலாக ஆப்பிள் வாட்ச் சீரிஸையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது ஆப்பிள் நிறுவனம்.
நேற்றைய நிகழ்ச்சியில் ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 18 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும் திறன் கொண்ட இந்த ஐபோன் எஸ்9 சீரிஸ் புதிய வசதிகளை கொண்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உடல்நிலையை கண்காணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் இன் விலை 41 ஆயிரத்து 900 முதல் துவங்குகிறது. ஸ்டீல் வெர்சன் ரூ.70,900 எனவும், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலின் விலை ரூ.89,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 மாடல்களின் இந்திய சந்தை மதிப்பு விலையும் வெளியாகி உள்ளது.
ஆப்பிளின் 6.1-இன்ச் ஐபோன் 15 இந்தியாவில் ரூ.79,900 இலிருந்து தொடங்கி ரூ.1,09,900 வரை உள்ளது. ஆப்பிளின் 6.7 இன்ச் ஐபோன் 15 பிளஸ் ரூ.89,900 முதல் ரூ.1,19,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிளின் 6.1 இன்ச் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900ல் தொடங்கி 1,84,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6.7 இன்ச் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900ல் தொடங்கி ரூ.1,99,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
