ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டுபிடிக்க ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும் படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
unknown nodeஇந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தளபதி மனோஜ் பாண்டே, தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால், வாகனம் தீப்பிடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
unknown nodeதற்போது, அப்பகுதியில் தீவிரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பூஞ்ச் மாவட்டம், படா டோரியா பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உயிரிழந்த வீரர்களின் புகைப்படம் வெளியீடு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை டிரக் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
unknown node