ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது வீட்டிற்கு இரவு உணவு உண்பதற்கு சென்றுள்ளார்.
டெல்லியில் 2015 முதல் முதலமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், வீட்டிற்கு அழைத்துள்ளார். வந்து அவர்களுடன் ஒருவேளை உணவு உண்ண இணைய வாயிலாக அழைத்துள்ளார்.
unknown nodeதான் ஒரு முதலமைச்சர் என எதனையும் காட்டிக்கொள்ளாமல், அவரின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் அவரது வீட்டிற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
unknown nodeஅந்த ஆட்டோ ஓட்டுனரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று அவரது வீட்டில் சாப்பிட்டுள்ளார். பின்னர், அந்த ஆட்டோ டிரைவரை, நீங்களும் ஒரு நாள் வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும் என அழைத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
unknown node