320-ஐ எட்டியது சர்க்கரை அளவு...சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது.

Arvind Kejriwal

Arvind Kejriwal:திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே சர்க்கரை நோய் இருக்கும் நிலையில், சிறையில் அவரது சர்க்கரை அளவு 320ஆக அதிகரித்து விட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதையடுத்து அவருக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இரண்டு புள்ளி குறைந்த அளவு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், திகார் மருத்துவப் பயிற்சியாளரால் அவருக்கு டோஸ் கொடுக்கப்பட்டது என்றும், அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி எய்ம்ஸ் நிபுணர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகையில், ‘சர்க்கரை அளவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் அவருக்கு இன்சுலின் கொடுக்கலாம்’ என்று திகார் சிறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.