சிறையில் இருந்துகொண்டே முதல்வர் வேலையை பார்க்கும் கெஜ்ரிவால்.! பறக்கும் உத்தரவுகள்…

Delhi CM Arvind Kejriwal

Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது வரை டெல்லி மாநில அரசுக்கு தேவையான உத்தரவுகளை அவர் வழங்கி வருகிறார். முன்னதாக மார்ச் 23ஆம் தேதியன்று தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

டெல்லி குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முறையாக சிறையில் இருந்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, தற்போது டெல்லி மருத்துவமனையில் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மருந்துகள் உரிய அளவில் கிடைப்பதில்லை என்றும், அந்த குறைகளை சரி செய்யுமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜூக்கு உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போதிலும் அவர் டெல்லி மக்களின் உடல்நலம் குறித்து கவலைப்படுகிறார் என கூறினார். இதுபோக நீர்வளத்துறை குறித்த உத்தரவை மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி பிறப்பித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine