சுகாதாரத் துறை ஊழியர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சிக்கியது!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை ஊழியர்  வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்கள்

Madhya Pradesh officer

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை ஊழியர்  வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அஷ்பக் அலி ஸ்டோர் கீப்பர் என்பவர் சுகாதாரத் துறை பதவியில் இருந்து ஓய்வு பெற்று மாதம் ரூ.45,000 சம்பளம் பெற்று வருகிறார்.

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அஷ்பக் அலி மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரது லோக் ஆயுக்தா அமைப்பு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கியது.

மேலும், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் பெயரில் உள்ள சுமார் 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் அவரது வீடுகளில் சோதனையில் சிக்கியுள்ளன. இது போக, அவரது வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.