நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி – பிரதமர் மோடி

Prime Minister Modi has accused some people of trying to tarnish India's image globally.

உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாக குற்றசாட்டியுள்ளார். தேயிலையுடன் தொடர்புபடுத்தி நாட்டின் அடையாளத்தை களங்கப்படுத்த சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டில் அசாமில் மருத்துவ கல்லூரி இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 6 ஆண்டில் 6 மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அசாம் தேயிலைக்கு பெயர் பெற்றது என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி சென்று தனது முதல் தேர்தல் பேரணியை மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.