கவனம்....இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரத்தை எட்டிய தினசரி கொரோனா பாதிப்பு..!

Attention .... Daily corona cases reaches 30 thousand again in India ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 431 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,47,325  ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பைவிட 3 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,33,47,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 431 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,43,928 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,303 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,60,474 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,42,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 76,57,17,137 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 64,51,423 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.