கவனம்...இந்தியாவில் மீண்டும் 40 ஆயிரத்தை எட்டிய தினசரி கொரோனா பாதிப்பு ...!

Attention ... Daily corona damage reaches 40 thousand again in India ...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 338  ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 5 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,31,39,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 338 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,41,749 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,567பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,23,04,618ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,93,614 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 71,65,97,428 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 86,51,701 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.