" சன்னியாசிகளுக்கும் பாரத ரத்னா விருது " கோரிக்கை வைக்கும் பாபா ராம்தேவ்...!!

தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக், அசாமி பாடகர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்தது.

இந்நிலையில் இதுபற்றி பதஞ்சலி பாபா ராம்தேவ் கூறுகையில் , இதுவரை வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதில் துறவிகள் யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சிவக்குமார சுவாமி ஆகியோர் சமூக முன்னேற்றத்துக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளனர்.எனவே இனி வரும் காலங்களில் பாரத ரத்னா விருதை சன்னியாசிகளுக்கும் வழங்குவது குறித்த பரிசீலனையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.