சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும்!

இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31-ம் தேதி வரை கடுமையாக இருந்தது.

அதன்பின் மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 2-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இதன்காரணமாக, 3-ம்  கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்காரணமாக, இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவைகளுக்கான தடை, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மட்டுமே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியானது.