டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் விமானம் ஒன்றின் என்ஜினில், விமானம் ஓடுபாதையில் செல்லும்போது தீப்பிடித்துள்ளது.
டெல்லியிலிருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானம் பறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓடுபாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அதன் ஒரு என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து விமானம் உடனே நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை விமானத்தின் உள்ளிருந்த பயணி ஒருவர் தன் மொபைலில் படம் பிடித்துள்ளார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்துக்கு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
unknown node