ஹயாகட் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ரவீந்தர நாத் சிங் மர்ம நபர்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் நிலையில் மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது . அதில் ஹயாகட் சட்டமன்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுபவர் ரவீந்தர நாத் சிங். முன்னாள் ஜே.டி.யூ தலைவரான இவர் மர்ம நபர்களால் வியாழக்கிழமை சுட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் ரவீந்தர நாத் சிங் அதிகாலை 12.05 மணியளவில் துகாலியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது தர்பங்கா மாவட்டத்தில் பஹேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைரி-தாகோபூர் வட்டாரத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது வயிற்றில் இரண்டு புல்லட் காயங்களுடன் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தர்பங்கா மாவட்ட எஸ்பி அசோக் பிரசாத் கூறுகையில், நாங்கள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் சரிபார்க்கப்படுவதாகவும், மயக்த்தில் உள்ள சிங் அவர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…