இமாச்சல பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் – 1,800 பறவைகள் பலி!

Bird flu is prevalent in Himachal Pradesh following states including Rajasthan, Madhya Pradesh and Kerala.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் பறவைக் காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களின் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் நோயால் இறந்த பின்னர் இந்த நோய் பரவல் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது இமாச்சல பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள கன்கிரா மாவட்டம் பாங்க் டேம் ஏரியில் பறவை காய்ச்சலால் சீசனுக்கு வரும் 1,800 புலம்பெயர்ந்த பறவைகள் உயிரிழந்தூளாக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ப்ளூயன்சா வைரசால் பறவை காய்ச்சல் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.