வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி!

நரேந்திர மோடி : 543 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 232 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6,11,439 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அஜய் ராய் 4,59,084 வாக்குகளை பெற்று 1,52,355 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.