டெல்லியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்காமல் பாஜக அவமதிக்கிறது – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

The Aam Aadmi Party (AAP) has accused the BJP of not providing safety equipment to cleaners even amid the corona spread in Delhi.

டெல்லியில் கொரோணா பரவலுக்கு மத்தியில் கூட துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை பாஜக வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கான மக்கள்  உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக கட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடிய டெல்லி முனிசிபல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை எனவும், பாஜக துப்புரவு தொழிலாளர்களை அவமதிப்பதாகவும் ஆம் ஆதமி நகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் அவர்கள் டெல்லியின் சுகாதார அமைப்பு சரியில்லை என்பதை திசைதிருப்பும் தந்திரம் என கூறியுள்ளார்.