பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி – ஜெ.பி. நட்டா

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை மத்திய நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசு பொதுநிதி திரட்டி வருகிறது.
அரசுக்கு உதவும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள் என நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை மத்திய நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
All MPs of BJP will release 1 crore rs from their MPLADS fund to the Central Relief Fund in support to fight against Covid-19. #IndiaFightsCorona
— Jagat Prakash Nadda (@JPNadda) March 28, 2020