மீண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர்.!

BJP national leader JP Natta is reportedly returning to Tamil Nadu on January 30. He is in consultation with BJP organizers.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 30-ம் தேதி 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா 234 சட்டமன்ற தொகுதிகளின் பாஜக அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29-ஆம் தேதி புதுச்சேரி வரும் ஜே.பி. நட்டா, அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அடுத்தநாள், புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் பாஜகாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரையாற்றுகிறார். 30-ஆம் தேதி மதுரை வரும் அவர் 2 நாட்கள் தங்குகிறார். தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வரும் 23-ஆம் தேதி 3 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில், ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.