மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு நேர்ந்ததை பற்றி ஏன் யாரும் பேசவில்லை.? கண்ணீருடன் பேசிய பாஜக எம்பி.!

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு நேர்ந்ததை பற்றி ஏன் யாரும் பேசவில்லை என பாஜக பெண் எம்பி லாக்கெட் சட்டர்ஜி கண்ணீருடன் பேசியுள்ளார்.

BJP MP Locket Chatterjee

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு நேர்ந்ததை பற்றி ஏன் யாரும் பேசவில்லை என பாஜக பெண் எம்பி லாக்கெட் சட்டர்ஜி கண்ணீருடன் பேசியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையியே ஏற்பட்ட கலவரமானது இரண்டு தினங்கள் முன்பு வெளியான வீடியோ மூலம் பலரது நெஞ்சத்தை பதறவைத்தது. அதில் ஒரு கொடூர கும்பல் ஒரு பெண்களை ஆடைகளின்றி இழுத்து செல்வது போல காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,  மேற்கு வங்க பாஜக பெண் எம்பி லாக்கெட் சட்டர்ஜி அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் பற்றி குறிப்பிட்டார். அவர் கூறுகையில், மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் மணிப்பூர் போன்ற ஒரு கொடூரமான சம்பவம் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு நடந்துள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை செய்தியாளர்களை மத்தியில் விவரிக்கும் போது கண்ணீர் சிந்தினார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

unknown node