அசாம் சட்ட சபை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்று ஆளும் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அசாம் சட்டசபை தேர்தல் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அதேபோல பாஜக கூட்டணியிலும் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய சில கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வந்தது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 76 தொகுதிகளை கைப்பற்றியதுடன், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளை கைப்பற்றியது. 76 தொகுதிகளை கைப்பற்றி அசாமில் ஆளும் கட்சியான பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து அசாம் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் அசாமில் காங்கிரஸ் தான் அடுத்தடுத்த இரு முறைகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸை தவிர்த்து முதல்முறையாக பாஜக இரு முறை வெற்றி பெற்றுள்ளது வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…