கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவத்தால் பரபரப்பு...!

முசாபர்நகர்: விஜயதசமியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

முசாபர்நகர்: விஜயதசமியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு புனித நதிகளில் சாதுக்கள் நீராடுவர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கங்கை நதி பகுதியில் பல ஆசிரமங்களைச் சேர்ந்த சாதுக்கள் நீராட மறுத்துவிட்டனர்.

அப்பகுதியில் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து கருப்பு நிறமாக மாறியிருந்தது. இதனால் சாதுக்கள் கங்கையில் நீராட மறுத்தனர்.

தற்போது முசாபர்நகர் நிர்வாகம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.