நாங்கள் உங்கள் பணியாளர்கள்:
நாங்கள் உங்களின் பணியாளர்கள் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பேசிய அவர், அதிகார வேட்கை உள்ளவர்கள் நாட்டை ஆள்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்களுக்கு பெறும் தீங்குகளை செய்துவிட்டார்கள். குறிப்பிட்ட வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்காக செயல்படாமல் நாட்டு மக்களின் சிரமங்களை குறைப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
14.04.2023 5:30 PM
சிஎஸ்கேவின் தமிழ் புத்தாண்டு:
சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், ‘எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளதுடன் ‘ருத்துராஜ். தோனி, ஜடேஜா ஆகியோர் வெள்ளை வேஷ்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் நடந்து வருவது போன்ற புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
unknown node14.04.2023 5:00 PM
முகக்கவசம் கட்டாயம் :
ஏப்.17ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உயர்நீதிமன்றத்துக்கு வரும் அனைத்து ஊழியர்கள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
14.04.2023 4:30 PM
சிறந்த திருநங்கைக்கு விருது:
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக, தனது கிராமியம், நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சேவையை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 31 லட்சம் காசோலையும். பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
14.04.2023 4:00 PM
125 அடி அம்பேத்கர் சிலை:
ஹைதராபாத் நகரில் 125 அடி அம்பேத்கரின் சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். நாட்டிலேயே மிகப்பெரிய அம்பேத்கரின் சிலை இதுவாகும். இந்த சிலையை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் உடன் இணைந்து நாட்டுக்கு சந்திரசேகர ராவ் அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அரசியல் பிரமுகர்கள் வந்திருந்தனர்.
14.04.2023 3:30 PM
சசிகலா பேட்டி:
சென்னையில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ஜாதி அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதாவது, தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் ஆதரவாளராக இருந்திருந்தால், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இபிஎஸ்சை முதலமைச்சராக ஆக்கியிருக்கமாட்டேன். தன்னை பொறுத்தவரை கட்சியில் உள்ள அனைவருமே சமம். அப்படிதான் எம்ஜிஆர், ஜெயலலிதா பார்த்தார்கள். அவர்களுடைய பாதையைதான் தானும் பின்பற்றுகிறேன் என தெரிவித்தார்.
14.04.2023 1:50 PM
பூப்பந்து மைதானம் திறப்பு :
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹமிர்பூரில் உள்ள தேசிய சிறப்பு மையத்தில் இளைய வீரருடன் பேட்மிண்டன் விளையாடினார், அங்கு அவர் இன்று பூப்பந்து மைதானம், உட்புறம், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் மல்யுத்த அரங்குகளை திறந்து வைத்தார்.
unknown node14.04.2023 11:56 AM
முதல்வர் மீது புகார் :
முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெண்டர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்ததாகவும், இந்த பணம் 2011ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
14.04.2023 11:30 AM
ரபேல் வாட்ச் பில் :
திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் பணியில் இருந்தபோது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது; அதில் ஒரு வாட்ச்-ஐ நான் வைத்திருக்கிறேன் என்று ரபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார். பில்லை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
14.04.2023 10:40 AM
அம்பேத்கர் ஜெயந்தி :
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் டாக்டர் பிஆர் அம்பேத்கருக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
unknown node14.04.2023 10:10 AM
DMK Files :
இன்னும் சற்று நேரத்தில் அதாவது, காலை 10:15 மணிக்கு DMKFiles என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட இருக்கிறார். ஊழல் பட்டியலை வெளியிட பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை அறிவித்தது போல் இன்று ஆதாரப்பூர்வமாக பட்டியலை வெளியிட்டால், இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
14.04.2023 09:35 AM
தமிழ்நாடு வீரர்:
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அதில், உயிரிழந்த தமிழ்நாடு வீரர்யோகேஷ்குமார்உடல்தற்போது மதுரை வந்தடைந்தது.
14.04.2023 09:20 AM