டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். கொசுவிரட்டி மருந்தினால் உருவான கார்பன் மோனாக்சைட் இரவு முழுவதும் சுவாசித்ததால் உயிரிழப்பு என டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வியாழக்கிழமை இரவு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கொசுவர்த்தி சுருளை ஏற்றிக்கொண்டு தூங்கியுள்ளனர். காலையில், அனைவரும் இறந்து கிடந்தனர். கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடை இரவோடு இரவாக சுவாசித்ததால் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.