#breaking: கொரோனா பரவல் – பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

The Union Cabinet will meet tomorrow morning under the chairmanship of Prime Minister Narendra Modi on issues including corona spread.

கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ரதீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் முழு பொது முடக்கம் வருமா? அல்லது வேறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிரிபார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக மே 2ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.