#BREAKING: இன்னும் 6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம்

Serum Institute announces introduction of corona vaccine for children in India in 6 more months.

குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் என சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு.

இன்னும் 6 மாதங்களில் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகமாகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என சிஐஐ மாநாட்டில் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 6 மதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.