#BREAKING: ஏப்.1 முதல் ரூ.500க்கு சிலிண்டர்! – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 1 முதல் ராஜஸ்தானில் ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு.

ஏப்ரல் 1 முதல் ராஜஸ்தானில் ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தலா ரூ.500 வீதம் ஓராண்டில் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அரசின் நலத் திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.