இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்2,51,209 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 627 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,06,22,709 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,86,384 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,51,209ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 30,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,06,22,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 627ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,92,327 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 3,47,443பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,80,24,771 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 96,861 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 1,64,44,73,216 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 57,35,692 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.