#Breaking : இந்தாண்டு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

In the case of 50% reservation of the Tamil Nadu government, the Supreme Court has ruled that there is no concession for doctors this year.

தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு சலுகை கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மத்திய அரசு மற்றும் சில மருத்துவர்கள் சார்பில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்ய கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, சிறப்பு மருத்துவ மேற்படிப்பு உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என தீர்ப்பளித்துள்ளது.