ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு.
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node