#BREAKING: ஒமைக்ரான் தடுப்பு – 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு!

The Central Committee is rushing to 10 states, including Tamil Nadu, to control the spread of omega-3 corona.

ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க மத்தியக் குழு 10 மாநிலங்களுக்கு செல்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட், பஞ்சாப், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்கிறது. தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

#BREAKING: ஒமைக்ரான் தடுப்பு – 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு!