#BREAKING: முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஜன.12ல் தொடக்கம்!

The Federal Department of Health has announced that the consultation for the postgraduate medical course will begin on the 12th

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழக்கில் சமீபத்தில் முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், தற்போது கலந்தாய்வு வரும் 12-ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த 7-ஆம் தேதி முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதி அளித்தது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.