இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் .!தினகரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டிப்பு

This news gives information about Bribe to get a double leaf logo! Ban extension to investigate the case against the daily

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்  இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும்  போட்டி நிலவியது. இதன் பின்னர்  தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் தினகரன்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

unknown node

டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  தினகரன் சார்பில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க நேற்று (மார்ச் 20 ஆம் தேதி )வரை தடை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது .

இதன் பின்னர் நேற்று விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம்,இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.