இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்பட கூடும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு சூழ்நிலைகளால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவானது அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 90 சதவீத இடங்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரமித் தேப்நாத் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் வெப்ப அலையால் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக தலைநகர் டெல்லி கடுமையான வெப்ப அலை தாக்துதலுக்கு உள்ளாகும் என தெளிவுபடுத்துகிறது.
17 ஆயிரம் பேர் உயிரிழப்பு :
unknown nodeஇந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 17,000 க்கும் மேற்பட்டோர் வெப்ப அலைகளால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவிமும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில் 13 பேர் வெப்பத்தின் தாக்கத்தினால் உயிரிழந்தனர். இதுபோன்று தான் கடந்த 50 ஆண்டுகளில் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
டெல்லி :
unknown nodeவெப்ப அலைகளின் தாக்கத்தை இந்தியா உடனடியாக எதிர்கொள்ளத் தவறினால், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்தனர்.டெல்லி அரசாங்கத்தின் பாதிப்பு மதிப்பீட்டின்படி, வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட தற்போதைய வெப்பநிலையை எதிர்கொள்ளும் திட்டங்களில் மேற்கூறிய உரிய மதிப்பீடுகள் இல்லை எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.இது டெல்லியில் உள்ள “குறைந்த” காலநிலை-பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கூட அதிக வெப்ப அலை அபாயத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.
வெப்ப அலை :
unknown nodeஒரு பகுதியின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப்பாங்கான பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். வெப்ப அலைக்கான வரம்பானது, குறிப்பிட்ட அளவில் இருந்து, குறைந்தது 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது எட்டப்படும் போது கணக்கில் அந்த பகுதியின் வெப்ப அலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஏப்ரல் – ஜூன் :
unknown nodeஇந்த மாத தொடக்கத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம், வடமேற்கு மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என கணித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான வெப்ப அலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.