காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாமல் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசிக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு, கர்நாடகா அரசு காவேரியில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென உத்தரவிடக் கோரியும் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மேகதாது அணை விவகாரம் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகளை ஆய்வு செய்து 20 மீட்டர் தூரத்திற்கு ஒரு மரக்கட்டை வீதம் அடையாளத்தை பதிவு செய்து தற்போது முதற்கட்ட பணிகளை கர்நாடக அரசு ஆரம்பித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் என்று தமிழக அரசு ஆரம்ப முதலே மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. இந்த நாள் வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனைக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றியும் விவாதிக்கப்படும் எனது கூறப்படுகிறது.
