சுஷாந்த் மரண வழக்கு: சுஷாந்தின் நண்பரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானியிடம் மீண்டும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானியிடம் மீண்டும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.siddharth patani

இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்தின் சடலத்தை அவரின் நண்பரான சித்தார்த் பித்தானிதான் பார்த்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவரிடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில், சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானியிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள், மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் இல்லத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.