நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரின் தந்தையிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கினார்கள்.
இந்த வழக்கில் சுஷாந்தின் நண்பரான சித்தார்த் பித்தானி மற்றும் அவர் வீட்டில் சமையல்காரரிடம் சிபிஐ அதிகாரிகள், மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் இல்லத்தில் நேற்று விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில், சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரின் தந்தையிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை ஆஜராகுமாறு அவர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.
மேலும் சுஷாந்த் உயிரிழந்த வழக்கில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த்தின் தந்தை புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.