மாநில அரசின் உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்காக 2024 ஜனவரி 10ஆம் தேதி கொடுக்க வேண்டிய வரிப்பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை விடுவித்தது.அதில், மத்திய அரசு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு கூடுதல் தவணையாக ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு வெளியிடுகிறது என்று தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்ளளவு…
ஆந்திரப் பிரதேசம் ரூ.2952.74.,
அருணாச்சல பிரதேசம் ரூ.1281.93.,
அசாம் ரூ.2282.24.,
பீகார் ரூ.7338.44.,
சத்தீஸ்கர் ரூ.2485.79.,
கோவா ரூ.281.63.,
குஜராத் ரூ.2537.59.,
ஹரியானா ரூ.797.47.,
இமாச்சல பிரதேசம் ரூ.605.57.,
ஜார்கண்ட் ரூ.2412.83.,
கர்நாடகா ரூ.2660.88.,
கேரளா ரூ.1404.50.,
மத்திய பிரதேசம் ரூ.5727.44.,
மகாராஷ்டிரா ரூ.4608.96.,
மணிப்பூர் ரூ.522.41.,
மேகாலயா ரூ.559.61.,
மிசோரம் ரூ.364.80.,
நாகாலாந்து ரூ.415.15.,
ஒடிசா ரூ.3303.69.,
பஞ்சாப் ரூ.1318.40.,
ராஜஸ்தான் ரூ.4396.64.,
சிக்கிம் ரூ.283.10
தமிழ்நாடு ரூ.2976.10
தெலுங்கானா ரூ.1533.64
திரிபுரா ரூ.516.56
உத்தரப்பிரதேசம் ரூ.13088.51
உத்தரகாண்ட் ரூ. 815.71
மேற்கு வங்காளம் ரூ.5488.88
unknown node