ஆண்களுடன் அரட்டை...காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்.!

மற்ற ஆண்களுடன் அரட்டையடித்ததால் காதலியை காதலனே கொலை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற ஆண்களுடன் அரட்டையடித்ததால் காதலியை காதலனே கொலை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வசித்து வரும் கனகபுரத்தைச் சேர்ந்த நவ்யா காவல் துறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் (ஐஎஸ்டி) எழுத்தராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும், பிரசாந்த் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நவ்யா தனது பிறந்த நாளை காதலன் பிரசாந்துடன் கொண்டாடினார்.  அப்போது தனது காதலி பிறந்தநாள் கேக்கை வெட்டிய உடனேயே காதலியின் கழுத்தை பிரசாந் கொடூரமாக அறுத்துள்ளார்.

பிறகு ரத்த வெள்ளத்தில் அங்கு கிடைத்த நவ்யா விக்டோரியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பரிசோதித்த  மருத்துவர்கள் நவ்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து ராஜகோபால் நகர் போலீஸ் விசாரணை நடத்தினார்கள். “விசாரணையில் போது, நவ்யா மற்ற ஆண்களுடன் அரட்டையடித்ததால் அவளைக் கொன்றதாக பிரசாந்த் கூறினார். இருவரும் சமீப காலங்களில் இந்த பிரச்சனைக்காக பலமுறை சண்டையிட்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளார். காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.