ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனுடன் சேர்த்து சிபிஐ கைது செய்யாமல் இருக்க தடைகோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு சிபிஐ காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து சிபிஐ கைது செய்யாமல் இருக்க தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் இன்று அமலாக்கத்துறை வழக்கின் விசாரணை நடைபெற்றது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தது.மேலும் கீழமை நீதிமன்றங்களை அணுகவும் அறிவுறித்தியது.இதனால் சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய முடியும்.
இதனை தொடர்ந்து சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிதம்பரம் தரப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்கள்.இரு தரப்பினரும் தங்களது வாதங்களை கடுமையாக முன் வைத்தனர்.அதிலும் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் சிதம்பரம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அதற்கு பதிலாக சிதம்பரத்தை அமலாக்கத்துறையிடம் சரணடைய தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களுக்கு பின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது .இதற்கு பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தனி சிறையில் சிதம்பரத்தை அடைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…