மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..!

Published by
murugan
  • மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.
  • இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா  தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் ஆதரவாகவும் , திமுக , காங்கிரஸை  சார்ந்த 83 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். பின்னர் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாததை  ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி எம்.பிக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கடந்த 30 ஆண்டுகளாக  தமிழகத்தில் இருக்கும்  ஈழத் தமிழர்களுக்கு  குடியுரிமை வழங்கப்படாதது  ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்.பிக்கள் பேசினர்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின்  அதிர் ரஞ்சன் சவுத்ரி, சவுக்கதா ராய்  ஆகியோர் அரசியலமைப்பு  சட்டம் வழங்கிய பல்வேறு சட்டங்களை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்றும்  மத அடிப்படையில் குடியுரிமை  வழங்கும் முறையாக உள்ளது என எதிர்த்தனர்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தியது  காங்கிரஸ் எனக்கூறினர். ஊடுருவல்காரர்களுக்கும் ,அகதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மசோதா எந்தவித பாகுபாடும் இல்லை, எந்த மதத்தினரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இல்லை எனக் கூறினார்.

மேலும் மன்மோகன் சிங் , அத்வானி ஆகியோர் பாகிஸ்தான் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக 0.001 சதவிதம் கூட இந்த மசோதா இயற்றவில்லை என கூறினர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நீண்ட நேரமாக அமித் ஷா  பதிலளித்தார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமாக இயற்றப்படவில்லை. நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என விளக்கம் அளித்தார்.

அமித் ஷாவின் விளக்கத்தை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும் , எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago