கொரோனா வைரஸ் தொற்றருந்து மீண்ட 80 வயது முன்னாள் முதல்வர் பளு தூக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இது அரசியல்வாதிகள் அமைச்சர்கள் பணம் உள்ளவர்கள், ஏழைகள் என யாரையும் பிரித்து பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரே நோய் தான். உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 1977 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சங்கர் சிங் வகேலா என்னும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி உருவாக்கினார்.
இந்நிலையில், கடந்த மாதம் இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு, ஜூலை 16 ஆம் தேதி தான் குணமாகி வீடு திரும்பினார். வீட்டில் முடங்கியிருக்காமல், இவர் தற்பொழுது உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். தினமும் வாக்கிங் செல்வது, பளு தூக்குவது என தனது உடலை கட்டுக்கோப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலும் பாதுகாத்து வருகிறார். இவர் செய்யும் உடற்பயிற்சி புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown node