காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 20 சதவீத ஏழை மக்களுக்கு மாதம் அதிகபட்சம் 6 ஆயிரம் ஊதியம் உறுதி செய்யப்படும் என கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சியின் வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியாக அறிவித்து வருகிறது. தற்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் வெளியிடப்பட்டது. இதில் குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 20 சதவீதம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த பட்ச ஊதிய உதவி திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் அதிகபட்சம் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக மாதத்தில் 12 ஆயிரத்துக்கு கீழ் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு ஊதியமாக சென்றடையும். ஒரு குடும்பம் மாதம் 8000 சம்பாதிக்கிறது என்றால் அந்த குடும்பத்திற்கு 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் . அதுவே 6000 சம்பாதிக்கிறது என்றால் அந்த குடும்பத்திற்கு 6 ஆயிரம் வழங்கப்படும். இதன் காரணமாக அந்த குடும்ப மாதாந்திர வருமானம் 12 ஆயிரத்தை எட்டும் இந்தத் திட்டத்தின் மூலம் 25 கோடி ஏழை குடும்பத்தினர் பயன் பெறுவர் என்று அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.