தொடர் கனமழை: இந்த மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 13ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இமாச்சல பிரதேசத்திலும் நாளை

School Leave

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, இமாச்சல், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 13ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இமாச்சல பிரதேசத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரபிரதேசம் தவிர்த்து, இந்த 4 மாநிலங்களுக்கு ‘அதிக மழை எச்சரிக்கை’ விடுத்தது. கனமழை காரணமாக டெல்லியில் இன்று ஜூலை 10ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.