இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,93,398 ஆக உயர்ந்தது.
அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 212 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,465 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 14,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,02,490 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,68,126 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
unknown node