மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து  மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா உறுதி செய்ததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன், ஒரு குறுகிய ஓய்வுக்குப் பிறகு நான் விரைவில் உங்களுடன் வருவேன் என்று தெரிவித்தார்.

unknown node