கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று.!

இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 11,692 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து  67,556 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 5,31,258  லிருந்து 5,31,300 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,72,256 லிருந்து  4,42,83,021 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,37,581 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,602 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.